Wednesday, September 23, 2009

முத்தம்..




தேய்ந்த நிலவு
வளர்ந்த இரவு அது!

3 நாள்
சண்டைக்கு முன்
முத்தமிட்ட அதே இடத்தில்
நீயும் நானும்!

சமாதான பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிய ...

முத்தம் தான்
முடிவென்று

ஒரு வரியாய்
இருவரும் விழைந்தோமே...

நினைவிருக்கிறதா?

Monday, September 21, 2009

"நான் உன்னை காதலிக்கிறேன்"


நீ
சொல்லுவாய்
என்று நானும்

நான்
சொல்லுவேன்
என்று நீயும்

காத்திருந்து

இறுதிவரை
இருவரும்
சொல்ல முடியாம
அந்த மூன்று
வார்த்தைகள் .......

"நான் உன்னை காதலிக்கிறேன்"

நீ இல்லாத இரவுகள்....




கருப்பாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது..

மவுனமாக இருக்கும் நேரங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......

வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........

கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....

உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........